அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் ; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 9:34 am

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ்குமார் (18). இவர் திருச்சியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது விடுமுறையில் வந்துள்ள அஜேஷ்குமார் நேற்றிரவு நண்பர்களுடன் சேர்ந்து உலக கால்பந்து போட்டியை அந்த பகுதியில் அமைக்கப்பட்ட திரையில் கண்டு ரசித்து அதிகாலை வீடு திரும்பினார்.

வீட்டின் அறையில் படுக்க சென்ற அவர் காலையில் பெற்றோர் அழைத்தும் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் மின் விசிறியில் போர்வையால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளச்சல் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே பைக் வைத்திருக்கும் அஜேஷ்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெற்றோரிடம் புதிய ரேஸ் பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், வாங்கி கொடுக்காததால் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அஜேஷ்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!