முத்தங்களால் முதல்வரை ஓவியமாக வரைந்த கல்லூரி மாணவர்: மாணவனுக்கு பரிசு வழங்கிய பெரம்பலூர் எம்எல்ஏ

16 July 2021, 10:28 pm
Quick Share

பெரம்பலூர்: முத்தங்களால் முதல்வரின் படத்தை வரைந்த மாணவனுக்கு பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரனின் மகன் நரசிம்மன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நரசிம்மனுக்கு இளம் வயதிலேயே ஒவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் தஞ்சை பெரிய கோவில், மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்டவைகளை மூக்கால் ஒவியமாக வரைந்துள்ளார். இதனிடையே தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உருவப் படத்தை பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால் ஒவியத்தை வரைந்துள்ளர்.

16 அடி நீளமும், எட்டரை அடி அகலமும் கொண்ட துணியில் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளார். தற்போது இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முத்தங்களால் ஓவியமாக வரைந்த கல்லூரி மாணவர் நரசிம்மனுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி, பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

Views: - 204

0

0