கோயம்பேட்டில் பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்ட மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 9:46 pm
Quick Share

சென்னை : கோயம்பேட்டில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அட்டகாசங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து போலீசாரும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

அண்மையில் சென்னையில் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 260

0

0