அரசு பேருந்தை நிறுத்தி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்… சக பயணிகள் பீதியில் கூச்சல் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 1:55 pm

சிதம்பரம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நகருக்கு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயில்வதற்காக சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான புவனகிரி, காட்டுமன்னார்கோயில், முட்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புவனகிரி வழியாக பூவாலை வரை செல்லும் தடம் எண் 7 அரசு பேருந்து மேலரத வீதி வழியாக சென்றபோது, மாணவர்கள் பேருந்தை நிறுத்தி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பேருந்தில் ஏறி மாணவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர்.

பின்னர் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது மற்ற மாணவர்கள், மாணவிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மோதல் போக்கை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!