யப்பா..என்னா அடி…தலைமுடியை பிடித்து மல்லுக்கட்டிய மாணவிகள்: தடுக்க சென்றவர்களுக்கும் அடி…வைரலாகும் சண்டை வீடியோ!!

Author: Rajesh
6 April 2022, 10:15 am
Quick Share

சென்னை: அண்ணா நகரில் தலை முடியை பிடித்து கொண்டு ஒருவரையொருவர் அடித்து கொண்டும் நடுரோட்டில் இரு மாணவிகள் போட்ட சண்டையால் அந்த பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது

தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபலமான மகளிர் கல்லூரி உள்ளது .அந்த கல்லூரியில் பல மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர். மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்டதை அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.

மேலும், அந்த இளைஞர்கள் கமெண்ட் அடித்துக்கொண்டே வீடியோ எடுத்தனர். சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும்போது தடுக்க வந்த ஒரு மாணவியை மற்றொரு மாணவி அடித்து விரட்டியுள்ளார். ந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் அவர்களை பற்றி பல கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர் .இப்படி நடு ரோட்டில் நடைபெற்ற இந்த சண்டையின் போது போலீசார் யாரும் வரவில்லை .பிறகு தாங்களாகவே அவர்கள் விலகி சென்று விட்டனர்

இரு மாணவிகளுக்கிடையே நடந்த மோதல் சம்பவத்தால் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளையும் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

Views: - 355

0

0