கோவை மாநகராட்சியில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆணையர் : சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு காசோலை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 11:50 am
Corporation Flag Hoist- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியில் 73வது குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை கொடுக்கபட்டது

கோவை மாநகராட்சியில் இன்று 73வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது, கொடி ஏற்றுவதற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்த பின்னர் மாநகராட்சி ஆணையார் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் 2வது முறை கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது என்பது நெகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். கோவைக்கு என்று தனி சிறப்பும் வரலாறும் உள்ளது.

இம்மாநகராட்சியல், நான் சிறந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த நகரமாகவும், நற்பெயர் கொண்டும் கோவை திகழ வேண்டும் என்பதே என் ஆசை.

தற்பொழுது, நகற்புர உள்ளாட்ச்சி தேர்தலிலும் பணியாற்ற இருகிறோம். மக்கள் பிரதிநிதி கீழ் பணியாற்ற இருக்கும் நாம் அனைவரும் சிறந்து நம் செயலை சிறப்புற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை கொடுக்கபட்டது.

Views: - 1584

0

0