மூவர்ணக்கொடியை ஏற்றிய அதிமுக எம்எல்ஏ : ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 11:59 am
ADMK Mla Flag - Updatenews360
Quick Share

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பொருத்தவரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வ.உ.சி பூங்கா மைதானத்திலும், மாநகராட்சி ஆணையர் தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ., கே.ஆர்.ஜெயராம் இன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மேலும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார்.

Views: - 2706

0

0