சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது : உலக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 1:17 pm
Sathy Tiger Reserve Award - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது வழங்கி உலக அளவில் முதலிடம் என்ற கவுரவம் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 10 வனச்சரகங்களை உள்ளடக்கிய புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்த புலிகள் காப்பகம் 1455 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கடந்த 2013 ஆம் ஆண்டு 30 புலிகள் என்ற எண்ணிக்கை கொண்ட புலிகள் காப்பகமாக செயல்படத் துவங்கியது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்காக ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட கன்சர்வேஷன் அண்டு டைகர், டைகர் ஸ்டேன்டர்டு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி உலகளாவிய நிதியகம் இதன் நோக்கம் 2010ஆம் ஆண்டு தொடங்கி எதிர் வரும் 10 ஆண்டுகளில் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பதாகும்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு | The  government has allocated Rs. 4.86 crore for the first installment of the  Sathyamangalam Wildlife Sanctuary | Puthiyathalaimurai ...

அவ்வாறு உயர்த்திய நாடுகளுக்கு TS-2 என்ற சர்வதேச விருதினை இந்த கூட்டமைப்பு வழங்குகிறது. கடந்த 2013ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்தியதில் உலக அளவில் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முதல் இடம் பெற்றுள்ளதாக இந்த கூட்டமைப்பு அறிவித்து TS-2 விருதினையும் அறிவித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கிடைத்த கவுரவம்..! - Seithipunal

2-வது இடத்தை நேபாளம் நாட்டில் உள்ள பார்டியா தேசிய பூங்கா பெற்று உள்ளது. தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி, பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்கியுள்ளது.

Views: - 3764

0

0