மதுரையில் பணப்பட்டுவாடா குறித்து புகார் வந்துள்ளது : தேர்தல் அலுவலர் தகவல்!!!

2 March 2021, 12:15 pm
Madurai Collector -Updatenews360
Quick Share

மதுரை : தேர்தல் விதிமீறல்கள் குறித்து தற்போது சில புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில் அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.

தேர்தல் விதிமீறல்கள் புகார்கள் குறித்தும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து கட்பாட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் பேசியபோது : தேர்தல் அறிவிப்பிற்கு பின் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 0452-2531006 – 0452 – 2531008 என்ற தரைவழி தொலைபேசி மூலமாகவும், 0452 – 1950 என்ற இலவச எண் மூலமாகவும் புகார்களை அளிக்கலாம் எனவும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் தன்மை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், பணப்பட்டுவாடா, பரிசுபொருட்கள் வழங்குவதை தடுக்கும் நோக்கில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அன்பழகன், தேர்தல் விதிமீறல்கள் குறித்து தற்போது சில புகார்கள் எழுந்துள்ளது. திரையரங்குகளில், லோக்கல் சேனல்களில் அரசு விளம்பரம் ஒளிப்பரப்பு செய்வதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொது இடங்களில் அரசியல் தலைவர் உருவம், சின்னங்கள் இருந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்படும், அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட விளம்பரத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்றார்.

Views: - 1

0

0