ஹெச்.ராஜா மீது புகார் : வழக்குப்பதிவு செய்ய மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..

10 November 2020, 12:41 pm
H Raja - Updatenews360
Quick Share

அரியலூர் : பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில் அரியலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் வேல்யாத்திரை நடைபெற்று வரும் சூழ்நிலையில் திருத்தணியில் நடைபெற்ற வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடைசெய்தது. இது குறித்து பேசிய ஹெச்.ராஜா தமிழக அரசு நொண்டி சாக்கு கூறி யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது என பேசியுள்ளார்.

மேலும் இதுகுறித்து டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். இது மாற்று திறனாளிகளின் மனதை புண்படுத்துவதாகவும் அவர்மீது 2016 ஆண்டு சட்டத்தின் 92 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அரியலூர் நகர போலீசாரிடம் புகார் அளிக்கப்படுள்ளது.

Views: - 23

0

0