சாதிய வன்கொடுமை புகாரில் அமைச்சர் துரைமுருகன்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நடவடிக்கை!!

20 July 2021, 1:35 pm
Quick Share

வேலூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூரை மாவட்டம் சேர்க்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி. இவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நில அபகரிப்பு, சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

duraimurugan_updatenews360

மேலும் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரமணி அளித்த புகாரில் அமைச்சர் துரைமுருகன் தவிர அவரது உறவினர்கள் முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பெயரும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 304

0

0