வனவிலங்குகள் தாண்டாத வகையில் வனப்பகுதியில் விரைவில் கான்கிரீட் தடுப்பு சுவர் : வனத்துறை அமைச்சர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 2:52 pm
Minister Ramachandran - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகையில் மர்மமான முறையில் இறந்த புலி குறித்து ஆய்வு நடந்து வருவதால் இறப்பிற்கான காரணம் தெரியும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தூய்மை பணியினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு தினமும் பல்வேறு திட்டங்களை , எதிர்கட்சியினர் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு தமிழக முதல்வர் அளித்து வருகின்றார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை இந்த அரசு ஏற்றுள்ளது.

நேற்றில் இருந்து 5 நாட்களுக்கு தமிழகம் முழுதும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தூய்மை பணியினை இந்த அரசு செய்து வருகின்றது. கோவையில் 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் தூய்மைபடுத்தபட இருக்கின்றது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்தபடுகின்றது.

மழை நீர் தேங்காமல் இருந்தால் டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும். மழை நீர் , வெள்ளம் தூய்மைபடுத்தும் மெகா பணியினை தமிழக முதல்வர் செய்ய உத்திரவிட்டுள்ளார்.

இது தவிர மக்களை தேடி மருத்துவம் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர். ஜனநாயகத்தின் 3 வது தூணாகிய பத்திரிகையாளர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழுப்புணர்வு ஏற்படுள்ளது. தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்

மக்கள் தொகை அடிப்படையில் வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஒதுக்கினால் இன்னும் வேகமாக தடுப்பூசி போட முடியும், வன எல்லைகளில் கான்கிரீட் போடும் திட்டத்திற்கு மார்ச்சிற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும்.

கான்கிரீட் தடுப்பு சுவர் போட்டால் யானை ,மான்கள் போன்றவை அதை தாண்டி வராது. கோவை மாவட்டம் சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது, உடலை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்தவுடன் இறப்பிற்கான காரணம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 105

0

0