பிரதமர் அனுப்பிய இரங்கல் கடிதம்.. பங்காரு அடிகளாரின் மனைவியை சந்தித்து சமர்பித்த அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 4:52 pm

பிரதமர் அனுப்பிய இரங்கல் கடிதம்.. பங்காரு அடிகளாரின் மனைவியை சந்தித்து சமர்பித்த அண்ணாமலை!!!

கடந்த 19-ஆம் தேதி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து இருந்தனர். ஆளுநர் தமிழிசை, முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து, கண்ணீர் மேலாக அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் கடந்த 20-ஆம் தேதி மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று பங்காரு அடிகளாரின் மனைவி லக்‌ஷ்மியை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தனர். அப்போது, பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதத்தை வழங்கினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!