“இருள் நீங்கி இன்பம் பரவிட வாழ்த்துக்கள்“ : தீபத்திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!!
29 November 2020, 12:05 pmகார்த்திகை தீபம் முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை தீபத் திருவிழா பண்டிகை பொதுமக்கள் வீட்டில் தொடர்ந்து 3 நாட்கள் தீபம் ஏற்றி வழிபடுவர்.
இதன்படி தமிழக மக்களுக்கு கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகளை முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ள முதலமைச்சர், இருள் நீங்கி ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் எனது உளமார்ந்த திருகார்த்திதை தீப திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக டிவிட்ர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0
0