சட்டசிக்கல்களில் சிக்க வைக்கும் பாஜக அரசு… எதிர்கட்சிகளை முடக்குவே திட்டம் ; எம்பி கார்த்தி சிதம்பரம்!!

Author: Babu Lakshmanan
7 May 2024, 6:47 pm

எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- என்.ஐ.ஏ என்பது டெரரிசம் எதிர்ப்பாக நடக்கும் செயல்களை தடுப்பதற்காகவும், பின்பு அதன் விளைவுகளை விசாரிக்கவும், அதை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், முதல்வர் மீது விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்கிறார் என்றால், அரசியலுக்காக தான் பழிவாங்குவது ன்பது தான் அர்த்தம்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்பது கர்நாடகா அரசின் முடிவு. தமிழ்நாட்டில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும். தமிழக உரிமைகளை பாதுகாக்க தமிழக காங்கிரஸ் உறுதுணையாகவும் இருக்கும், எனக் கூறினார்.

மேலும் படிக்க: வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா…? நிரூபிக்கத் தயாரா…? மின்துறை அமைச்சருக்கு ராமதாஸ் சவால்!!

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணை எட்டாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, வருகின்ற ஜூன் 4ம் தேதி தெரியும். ஆசை ,பேராசை, கற்பனைக்கு எல்லாம் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இது தற்கொலையா? கொலையா என காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளியங்கிரி, மருதமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானைகள் வழித்தடம் என தமிழக அரசு பரிந்துரைந்துருப்பது குறித்த கேள்விக்கு :-பார்லிமென்டில் பலமுறை பேசி இருக்கேன். கண்டிப்பாக யானைகளுக்கான வழித்தடம் வேண்டும். இன்றைக்கு இருக்கிற வளர்ச்சியின் காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, நகரங்கள் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி காரணமாக யானைகளின் பாதுகாப்பிற்காகவும், யானைகளின் வழித்தடங்களுக்காகவும், தொடர்ந்து யானைகளை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தால், அதை வரவேற்கிறேன். அதேபோல விவசாயிகள் கோரிக்கை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டதில் காவி வண்ணம் இருப்பதற்கு குறித்து கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றாலும் அதை இயக்குவது எந்தக் கட்சியின் கீழ் இருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் ஜெர்சி ப்ளூ வண்ணம். அதை மாற்றுவது தேவையற்றது, என்று தெரிவித்தார்.

கஞ்சா பழக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கிறது. இதை சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஆலோசனை செய்து, இதை மருத்துவ சமுதாய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்கள் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது, எனக் குற்றம்சாட்டினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!