விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு தடை விதித்ததே இதற்காகத்தான் : போட்டுடைத்த காங்., எம்பி மாணிக்கம் தாகூர்

Author: Babu Lakshmanan
6 September 2021, 4:09 pm
manickam thakur
Quick Share

விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்ததற்கான காரணம் என்ன..? என்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை எம்பி மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளி , கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விதித்த விதி முறைகளை பள்ளிகளில் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு ஜப்பான் பிரதமர் எப்போது புதிதாக பதவி ஏற்கிறாராரோ? அதன் பிறகு அவர் கொடுத்த வாக்குறுதி வைத்துதான் நிதி இங்கு வழங்கப்படும் நிலை உள்ளது. ஆகவே ஜப்பான் அரசு நிதி கொடுத்தால் மட்டுமே மதுரையில் எய்ம்ஸ் குறித்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலை உள்ளது.

மத்திய அரசுக்கு எய்ம்ஸ் – க்கு உரிமை கொண்டாட முடியாது. திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக, கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததுடன், மூன்று முறை பூமி பூஜை நடத்தி இருப்பது , மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவதாக உள்ளது.

ரயில்வே மேம்பாலத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாட வேண்டும் என தமிழக அரசு கூறியிருப்பது, மக்கள் மீது முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ள அக்கறையை தான். ஆனால் அதை மத்திய மோடி அரசு மதவாத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது, என்றார்.

Views: - 408

0

1