கண்டெய்னரை பார்த்தாலே காண்டாகும் திமுகவினர் : தென்காசியில் போலீசாருடன் வாக்குவாதம்!!

18 April 2021, 12:38 pm
Thenkasi container -Updatenews360
Quick Share

தென்காசி : வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கல்லூரி அருகே கண்டெய்னர் நிறுத்தப்பட்டிருந்ததால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், கடைய நல்லூர், தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், யூஎஸ்பி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கல்லூரி அருகே 100 மீட்டர் தொலைவில் மைதானத்தில் கண்டெய்னர் லாரி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கண்டெய்னரை பார்த்த திமுகவினர் உடனே அதை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.

கண்டெய்னர் எதுக்காக நிறுத்தியுள்ளீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், போலீசார் விசாரணையில், அந்த கண்டெய்னர் அருகில் நடைபெறும் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் தேவையில்லாமல் வாகனங்கள் உலா வருவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாக புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் வாக்கு எந்திரங்கள் உள்ள கல்லூரி அருகே கண்டெய்னர் நிறுத்தப்பட்டதால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 46

0

0