கார் மீது மோதிய கண்டெய்னர் லாரி : 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

Author: Udayachandran
11 October 2020, 2:47 pm
Accident Dead - Updatenews360
Quick Share

சென்னை : தவறான பாதையில் வந்த ஒரு கன்டெய்னர் லாரி எதிர்திசையில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் ஒரு பெண் உட்பட ஆறு நபர்கள் சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தனர் . காரை ஜெயபால் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

பாண்டிச்சேரியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் மாமல்லபுரம் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வலதுபுறம் செல்ல வேண்டிய கன்டெய்னர் லாரி ஒன்று இடப்புறமாக சாலையில் ராங் ரூட்டில் படுவேகத்தில் வந்துகொண்டிருந்தது.

மணமை என்ற பகுதியில் ராங் ரூட்டில் வந்த கன்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது . மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது . காரில் பயணம் செய்த பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், முருகன் , கார் ஓட்டிவந்த ஜெயபால் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாமல்லபுரம் காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் லாரியின் அடியில் சிக்கி கொண்டிருந்த காரை முதலில் வெளியே எடுத்தனர். பின்னர் அப்பளம் போல் நொறுங்கி இருந்த காரில் உயிர்க்கு போராடிக்கொண்டிருந்த பெண் சுபா, மூர்த்தி, சுந்தரவதனம் ஆகிய மூன்று பேர்களைமீட்டு 108 ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்தனர் .

மேலும் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டிருந்திருந்ததால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில் காரில் வந்த இரண்டு நபர்கள் அபாய கட்டத்தில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றார்.

Views: - 38

0

0