அவர் ஒரு GAY…அவரோட சேர்த்து வைச்சு பேசாதீங்க : நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 3:50 pm
Sri Reddy - Updatenews360
Quick Share

சமந்தா – நாகசைதன்யா நட்சத்திர ஜோடி 3 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரியயோர்கள் விருப்பப்டி பிரம்மாண்ட முறையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் யார் கண் பட்டதோ இருவரும் பிரிந்து விட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் இருவரும் பிரிவுக்கு காரணம் என்னவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் நடிகை சமந்தா விவகாரத்திற்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்த ப்ரீத்தம் ஜுகல்கருடன் காட்டி நெருக்கம்தான் என பலரும் கூறினார்கள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சமந்தா, அவர் என் சகோதரர் போன்றவர், அவருடன் அவ்வாறு ஒப்பிடாதீர்கள் என கடுமையாக பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகை சமந்தாவும் ப்ரீத்தம் ஜுகல்கரும் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. காரணம், ப்ரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். எனவே கண்டிப்பாக அவர் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணமாக இருக்க மாட்டார்.

ஒரு வேளை திருமணத்திற்கு பிறகும் ஓவர் கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடிகை சமந்தா நடித்தது அவருடைய விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை தவிர வேறு எதுவும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச விரும்பவில்லை. அது சரியாகவும் இருக்காது என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

Views: - 185

2

0