நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்.. என்கவுன்ட்டர்? மனைவி புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2024, 10:33 am

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்பவர் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது மனைவியோடு காரில் வந்தார்.

அப்போது , கிச்சிப்பாளையம் காவல்நிலைய போலீசார் , நீதிமன்றம் அருகே தடுத்து நிறுத்தி மற்றொரு வழக்கில் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!

காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராத ஜானை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடிதடி வழக்கில் 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து பிணையில் வந்த நிலையில் , இன்று ஜான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நெப்போலியன் என்பவரின் கொலை வழக்கு விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தநிலையில் என்கவுண்டர் செய்ய தனது கணவனை போலீசார் தூக்கி சென்றிருக்கலாம் என அவர் மனைவி வழக்கறிஞர் சரண்யா சந்தேகம் எழுப்பியுள்ளார்..‌

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?