நெல்லை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி!!

18 April 2021, 1:12 pm
Mahendragiri ISRO -Updatenews360
Quick Share

நெல்லை : மகேந்திரகிரியல் உள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெல்லையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் எல்என்டி தொழில் பிரிவில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பாதித்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் பத்தமடை அருகில் உள்ள சிவானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 31

0

0