மாவட்ட வாரியாக தொடர்ந்து முதலிடத்தில் கோவை : இன்று 474 பேர் பாதிப்பு!!

3 July 2021, 7:50 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளனர் அதன்படி மாவட்டத்தில் இன்று 474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த வாரங்களை காட்டிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை அதிக பாதிப்புடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்தது உள்ளது. அதன்படி இன்று 474 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20ஆயிரத்து 969ஆக உயர்ந்தது. தவிர, கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 857 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 910ஆக உள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 446 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 63 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 122

0

0