தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பில் திடீர் மாற்றம்…!

7 August 2020, 6:30 pm
Corona_UpdateNews360
Quick Share

சென்னை: தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில் 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு 5000ஐ கடந்துள்ளது. நாள்தோறும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. சென்னையில் உச்சக்கட்டமாக காணப்பட்ட கொரோனா, காஞ்சிபுரம், திருவள்ளூர் என அனைத்து  மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது தொடக்கத்தில் சென்னையில் காணப்பட்ட கொரோனா பாதிப்பு இப்போது சற்று குறைந்துள்ளது. அதாவது நீண்ட நாட்கள் கழித்து பாதிப்பானது ஆயிரத்துக்கும் கீழே குறைந்து பதிவாகி உள்ளது.

அந்த வகையில் சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் இருந்து 1103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 93,231  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிவிட்டனர்.

11,606 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 119 பேர் பலியாகினர். இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக 2,272  பேர் சென்னையில் மட்டும் பலியாகியுள்ளனர்.

Views: - 5

0

0