பல்பொருள் அங்காடியில் மட்டும் 15 பேர் : கோவையில் 392 பேருக்கு கொரோனா உறுதி

23 August 2020, 8:52 pm
coronavirus_tests_Updatenews360
Quick Share

கோவை: கோவையில் பல்பொருள் அங்காடியை சேர்ந்த 15 பேர் உள்பட 392 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 15 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்பொருள் மூடி சீல் வைக்கப்பட்டது. தவிர கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 34 வயது தலைமை செவிலியர், 19 வயது செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவி, சூலூர் விமானப்படை குடியிருப்பை சேர்ந்த 39 வயது ஆண், பொதுப்பணித் துறை அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்த 39 வயது ஆண்,

ஊரகப் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் காவலர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர மேட்டுப்பாளையதை சேர்ந்த 20 பேர், சிங்காநல்லூரை சேர்ந்த 18 பேர், கணபதியை சேர்ந்த 11 பேர், செல்வபுரத்தை சேர்ந்த 10 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 9 பேர் உள்பட 392 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 11 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கோவையில் 237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0