கொரோனா : கோவையில் 222 பேருக்கு பாதிப்பு உறுதி

6 November 2020, 9:28 pm
Corona_India_Second_Place_UpdateNews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 222 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் வெளியிட்ட பட்டியலில் கோவை ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 222 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.

தவிர கோவையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 571 அதிகரித்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 233 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 42 ஆயிரத்து 104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 17

0

0