கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு: சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்..!!

Author: Aarthi Sivakumar
10 January 2022, 4:20 pm
Quick Share

கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிறன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. எந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனத்தினரும் அச்சமடைந்துள்ளனர். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்த சூழலில் கோவையில் பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். தினமும் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் இங்கிருந்து ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

பெரும்பாலான தொழிலாளர்கள் கோவையில் விட்டுச் செல்வதால், உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 276

0

0