கோவையில் இன்று புதிதாக 213 பேருக்கு கொரோனா

7 November 2020, 8:35 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை: கோவையில் இன்று புதிதாக 213 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியிலில் கோவை ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 213 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டாவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 213 பேர் இன்று குணடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 43 ஆயிரத்து 317 பேர் கொரோனாவில் இருந்து குணடைந்துள்ளனர். தற்போது 1000 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 15

0

0