கோவையில் இன்று 439 பேருக்கு கொரோனா..! : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

27 August 2020, 8:41 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று 439 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை அரசு மருத்துவமனை 22 வயது பெண் பயிற்சி மருத்துவர், 41 வயது ஆண் மருத்துவப் பணியாளர், கோவைப்புதூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 27 வயது காவலர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 41 வயது ஆண், உப்பிலிப்பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 12 வயது சிறுமி, 13 வயது சிறுவன், 49 வயது ஆண் காவலர், தனியார் மருத்துவமனையை சேர்ந்த 3 பெண் மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர குனியமுத்தூரில் 18 பேர், பொள்ளாச்சியில் 15 பேர், செல்வபுரத்தில் 10 பேர், ஆர்.எஸ்.புரத்தில் 8 பேர், கே.கே.புதூரில் 6 பேர், போத்தனுர், பீளமேடு, மதுக்கரை, வடவள்ளி, டவுன்ஹால், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 439 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 273ஆக அதிகரித்துள்ளது.