கோவை அரசு மருத்துவமனையின் 3 பயிற்சி மருத்துவர்கள் உட்பட 581 பேருக்கு கொரோனா..!

1 September 2020, 11:44 pm
coronavirus_updatenews360
Quick Share

கோவை: கோவையில் அரசு மருத்துவமனையின் 3 பயிற்சி மருத்துவர்கள் உட்பட 581 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை ஐ. எல்.ஐ. வார்டில் பணியாற்றி வந்த 25, 27 வயது ஆண் பயிற்சி மருத்துவர்கள், 23 வயது பெண் பயிற்சி மருத்துவர், சிறைத் துறை அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்த 31 வயது ஆண், சிங்காநல்லூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 4 ஆண்கள், 2 சிறுவர்கள், பேரூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 31 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர கணபதியில் 32 பேர், விளாங்குறிச்சியில் 21 பேர், மேட்டுப்பாளையத்தில் 19 பேர், செல்வபுரத்தில் 13 பேர், சிங்காநல்லூரில் 8 பேர், பொள்ளாச்சியில் 7 பேர் உள்பட 581 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 16 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் 2 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவையில் 310 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 5

0

0