தமிழகத்தில் புதிதாக 835 பேருக்கு கொரோனா:12 பேர் உயிரிழப்பு

Author: kavin kumar
9 November 2021, 9:55 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் புதிதாக 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 10 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 924 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 64 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்து 271 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் சென்னையில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,271 ஆக உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 94 ஆக இருந்த பாதிப்பு, இன்று 98 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 265

0

0