தமிழகத்தில் புதிதாக 841 பேருக்கு கொரோனா:சென்னையில் குறைந்த கொரோனா பாதிப்பு

Author: kavin kumar
8 November 2021, 9:02 pm
TN corona -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 850 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 09 ஆயிரத்து 921- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 937- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 129 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 126 ஆக சற்று குறைந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று 96 ஆக இருந்த பாதிப்பு இன்று 94 ஆக குறைந்துள்ளது.

Views: - 291

0

0