திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிக்கு கொரோனா: ஒமிக்ரான் பாதிப்பு..??

Author: Udhayakumar Raman
6 December 2021, 3:46 pm
Quick Share

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயணிக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனோ நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து உலகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் பரவுதல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர மருத்துவ பரிசோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 61வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பரிசோதனைக்கு அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Views: - 202

0

0