15 முறை யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிதியளித்த யாசகர் : அமைச்சர் உதயகுமார் நேரில் சந்தித்து பாராட்டு!!

Author: Udayachandran
2 October 2020, 4:01 pm
RB Uday- updatenews360
Quick Share

மதுரை : கொரோனா நிவாரண நிதியாக யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய யாசகரை தமிழக வருவாய் துறை அமைச்சர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம் கொண்டார்.

இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10ஆயிரம் பணத்தை கடந்த சில மாதங்களாக கொரோனா நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்.

யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த யாசகர் பூல் பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவருடைய சேவையை பாராட்டி ஆட்சியர் விஜய் சுதந்திர தினத்தில் விருது வழங்கியுள்ளார்.

இதுவரை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கியுள்ள பூல் பாண்டியனை நேரில் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், யாசகருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

Views: - 49

0

0