8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு : தமிழகத்திற்கு கிடைத்த இடம் எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 6:59 pm
TN Corona - Updatenews360
Quick Share

நாட்டில் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று 68 ஆயிரம் பேருக்கு உறுதியாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 84 சதவீதம் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

மராட்டியத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்.த கர்நாடகாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், மத்திய பிரதேசத்தில் 2,276 பேரும், குஜராத்தில் 2 ஆயிரத்து 270 பேரும், கேரளாவில் 2 ஆயிரத்து 216 பேரும், தமிழகத்தில் 2 ஆயிரத்து 194 பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரத்து 153 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 808 ஆக உள்ளது. மொத்த பாதிப்புகள் 4.33 சதவீதம் ஆகும். இதில் கேரளா, மராட்டியம், பஞ்சாப்,கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் 80.17 சதவீதம் பாதிப்புகளை கொண்டுள்ளன.

தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நாளொன்றுக்கு உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 85

0

0