கோவையில் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்தது தினசரி பாதிப்பு : 13 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

Author: kavin kumar
19 January 2022, 9:36 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 83 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் இரண்டாயிரத்தைன்கடந்த தினசரி தொற்று பாதிப்பு இன்று 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று 3,082 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 13 ஆயிரத்து 728 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 955 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2537 பேர் உயிரிழந்து உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Views: - 228

0

0