கோவையில் 1014 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

19 June 2021, 9:22 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 1014 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் இன்றும் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதன்படி, இன்று 1014 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 1451 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போதையை நிலவரப்படி கோவையில் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,191 ஆக உள்ளது.இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்தி 11 ஆயிரத்து 588 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று 17 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதை தொடர்ந்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1871 ஆக அதிகரித்துள்ளது

Views: - 135

0

0