கொரோனாவால் தமிழக போலீசார் இத்தனை பேர் பாதிப்பா? – பலி எண்ணிக்கை எவ்வளவு?

Author: Aarthi
6 October 2020, 9:40 am
chennai police - updatenews360
Quick Share

கொரோனா தொற்றால் தமிழக போலீசார் 25 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக காவல்துறையை பொறுத்த வரையில், இதுவரை 7,800 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் இந்த கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Cbe Corona- updatenews360

இந்நிலையில், சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் 2,572 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 48

0

0