மதுரை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மாநகராட்சி தீவிர கண்காணிப்பு.!!

3 July 2021, 11:12 am
madurai corona updatenews360
Quick Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இரு நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல், முழு ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 72,460 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Madurai corona Laey Dead - Updatenews360

மதுரையில் கொரோனா தொற்றால் 1,113 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது 727 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 301 பேர் ஆக்சிஜன் வார்டிலும், 146 பேர் சாதாரண வார்டிலும் ,110 பேர் ஐ.சி.யு.,விலும், 84 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 28ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 80ல் இருந்து 70 ஆக குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் 94 பேருக்கும், நேற்று 85 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 168

0

0