கோவையில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக உயர்வு: இன்று 434 பேருக்கு தொற்று உறுதி

Author: Udayaraman
6 October 2020, 8:41 pm
corona testing 1-- updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 434 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த 4 நாள்களாக 500க்கும் கீழாக குறைந்துள்ளது. அதன்படி இன்றும் 500க்கும் கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினர் இன்ற வெளியிட்ட பட்டியலில் கோவை காந்திபுரம், கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர், குனியமுத்தூர், வெள்ளக்கிணர், விளாங்குறிச்சி, துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த 434 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 494 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்து 693 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 837 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 38

0

0