ரெம்டெசிவர் விநியோகத்தின் முதல்நாளே அதிருப்தி : காற்றில் பறந்த சமூக இடைவெளி… சாலையில் அமர்ந்து தர்ணா..

15 May 2021, 3:25 pm
remdesiver medicen crowd - updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று லேசான அறிகுறி தென்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து சிறந்த பலனை கொடுக்கிறது. எனவே, ரெம்டெசிவர் மருந்துகளின் தேவை அதிகரித்து, அதன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகளை பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பரவும் சூழலை உருவாக்கியுள்ளது.

இதனை தடுக்கவும், மருந்து தடையின்றி கிடைக்கும் விதமாக, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்று 300 பேருக்கு இந்த மருந்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் நேரு விளையாட்டு அரங்கில் குவிந்தனர். ஆனால், எந்தவித முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், பொதுமக்களுக்கு ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேரு விளையாட்டு அரங்கிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், தொற்று மேலும் பரவும் அபாயம் உருவாகியது.

Views: - 150

0

0