காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய ஆணையர்!!
5 September 2020, 6:11 pmகோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு காவல் ஆணையர் சுமித்சரன் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மருத்துவத் துறையினர் காவல் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்றனர்.
கோவையை பொருத்தவரையில் இங்கு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை பிஆர்எஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு சானிடைசர், கையுறை, முக கவசம், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
0
0