காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் : காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார்..!

6 September 2020, 3:24 pm
Quick Share

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் காவலர்களுக்கு ஃபேஸ் மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த கொரோனா காலத்தில் மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட மக்கள் சேவையாளர்கள் தங்கள் அயராத அர்பணிப்பை பணியில் காண்பித்து வருகின்றனர்.

முக்கியமாக மக்களிடம் நோய் தொற்று சென்று செறுவதை கட்டுப்படுத்துவதிலும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழக காவல்துறை உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறது.

அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, கோவை மாநகர காவல் சார்பாக காவல் ஆணையர் சுமித் சரண் காவல் அதிகாரிகளுக்கு ஃபேஸ் மாஸ்க், ஹேண்ட் சானிட்டைசர், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் அடங்கிய 2500 கிட்டுகளை வழங்கினார்.

Views: - 8

0

0