கொரோனா பரவல் எதிரொலி : தமிழக கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்!!

17 April 2021, 1:15 pm
Raod closed -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக கேரளா எல்லையில் 12 சிறு சாலைகள்மூடப்பட்டது , முக்கிய சாலைகளில் வரும் பிறமாநில வாகனங்களில் வருவோருக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தினமும் அதிகரித்து வரும் நிலையில் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்திலும் நோய்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து மாவட்டத்திலுள்ள தமிழக கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சிறு சாலைகளை, மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார்.

இதனையடுத்து எல்லை சாலைகளான களியக்காவிளை மார்க்கெட் சாலை, வன்னிகோடு சாலை, கடுவாக்குழிசாலை, பனங்காலை சாலை, பளுகல் மலையடி, புலியூர்சாலை, கொல்லங்கோடு, மாங்கோடு கச்சேரிநடை, பாத்திமாபுரம், புன்னமூட்டுகடை உட்பட இடங்களிலுள்ள 12 சிறு சாலைகள் பேரிக்கார்டு தடுப்புகளை கொண்டு அடைக்கபட்டது.

இதனால் இந்த சாலைவழியாக வந்த வாகனங்கள் திருப்பி விடபட்டது. எனினும் மாவட்டத்தில் முக்கிய எல்லை சாலைகளான கோழிவிளை, களியக்காவிளை உள்ளிட்ட சாலைகளில் கேரளாவிலிருந்து வாகனங்களில் வருவோரை தீவிர பரிசோதனைகளுக்கு உட்பட்டு இ பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கபட்டனர்.

Views: - 32

0

0