கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை : மாவட்ட ஆட்சியர் ராசாமணி..

30 September 2020, 1:37 pm
Cbe Collector- updatenews360
Quick Share

கோவை : கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரின் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாட பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் 1697 அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளபட்டது.

இதன் நிறைவு நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கீரை வகைகள், சோளம், தினை, குதிரை வாலி ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு பொருட்கள் வைக்கபட்டு வைக்கபட்டு இருந்தது.

நிறைவு விழா நிகழ்வில் பங்கேற்ற பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்று பரவலாக உள்ள சூழலில் அதனை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

பரவல் கூடுதலாக உள்ள இடங்கள் அடையாளம் காணபட்டு மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 662 காய்ச்சல் முகாம்கள் நடத்தபட்டு உள்ளது. 8 ஆயிரத்து 203 முகாம் நடத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யபட்டு உள்ளது என்றார்.

முகாமில் சோதனை செய்தவர்களில் 8 ஆயிரத்து 262 பேருக்கு தொற்று கண்டறியபட்டது. இந்த முகாம் பயனுள்ளதாக உள்ளது. தினமும் 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. மேலும் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் உள்ளதா என கேட்டு அறியப்படுகிறது என கூறினார்.

2 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கள பணியில் ஈடுபட்டு உள்ளனர். வரும் நாட்களில் தொற்றின் பாதிப்பு குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஆட்சியர் ராசாமணி, தொழில் நகரமான கோவையில் ஊரடங்கிற்கு பின்னர் வடமாநில தொழிலாளர்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அவர்கள் இங்கு வந்த பின்னர் 14 நாட்களில் தனிமைபடுத்தி கொண்டு பணி மேற்கொள்ள தொழில் அமைப்புகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இதனை ஆய்வு செய்ய அலுவலர்கள் குழு இணைந்த கண்காணித்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து காலை முதல் இரவு வரை 300 வாகனங்கள் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு உள்ளன. மக்கள் அதிகம் கூடாத வகையில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களின் ஆதரவு மூலம் இதனை கட்டுபடுத்த முடியும் என கூறினார். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவதும் மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Views: - 1

0

0