“வீடு தேடி வரும் கொரோனா பரிசோதனை“ : நடமாடும் வாகனங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

21 September 2020, 12:42 pm
Corona Vehicle- updatenews360
Quick Share

கோவை : கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500 கடந்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை செய்ய நடமாடும் பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். மண்டலத்திற்கு நான்கு வீதம் மொத்தம் 20 பரிசோதனை வாகனங்கள், மற்றும் 5 கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டன.

சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சுண்டக்காமுத்தூர் பகுதி மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சத்து மாத்திரை தொகுப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Views: - 0

0

0