கே.எம்.சி.ஹெச் தலைவருக்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சை

29 September 2020, 6:32 pm
Quick Share

கோவை: கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் பிரபல மருத்துவமனையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை கீழ் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இதன் தலைவராக நல்லா.ஜி.பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை மோசமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிர்வாக பணிகளை இணை நிர்வாக இயக்குனராக உள்ள பழனிசாமையின் மனைவி தவமணி பழனிசாமி நிர்வகித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Views: - 8

0

0