அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா : நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர்!!

25 October 2020, 5:40 pm
CM duraikannu- Updatenews360
Quick Share

சென்னை : ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று விசாரித்தார்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 15ம் தேதி சேலம் செல்லும் போது நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவிரி மருத்துவமனை, அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் முடிவின்படி 90 சதவீதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறப்பு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காவிரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மருத்துவமனைக்கு வந்து நேரில் கேட்டறிந்தார்.

மேலும் அமைச்சரின் குடும்பத்தினரையும் முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்றனர்.

Views: - 19

0

0