கோவையில் பாதிப்பை விட குணமானவர்கள் அதிகம் : பலி எண்ணிக்கையும் குறைந்தது!!

By: Udayachandran
11 October 2020, 8:06 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று 389 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் மாத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து குறைந்து வருகிறது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 600ல் இருந்து 500, 400 என்று படிப்படியாக குறைந்து தற்போது 300 என்ற நிலைக்கு வந்துள்ளது.

அதன்படி இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியிலில் கோவை பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், குனியமுத்தூர், செல்வபுரம், சரவணம்பட்டி, துடியலூர், கணபதி, கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, காந்திபுரம், பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 78 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63, 71 வயது முதியவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 72 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 390 பேர் குணமைடந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 31 ஆயிரத்து 709 போர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 917 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 39

0

0