கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் பேருந்து சேவை : வரவேற்பை பெற்ற சென்னை மாநகராட்சியின் செயல்..!!!

6 May 2021, 1:42 pm
oxygen bus - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை திட்டம் சென்னை அரசு மருத்துவமனையில தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் நேற்று பதிவாகியுள்ளன. அதேபோல, நேற்று ஒரே நாளில் 58 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வடமாநிலங்களை போலவே, தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கையும், புகாரும் அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oxygen_cylinder_updatenews360

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை திட்டம் சென்னை அரசு மருத்துவமனையில தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, தனியார் பள்ளி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸுகளாக மாற்றம் செய்யப்பட்டு,ஒரு வாகனத்தில் 6 முதல் 7 பேர் அமர்ந்து ஆக்சிஜன் சேவையை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

oxygen_cylinders_updatenews360

இதன்மூலம், சிகிச்சைக்கு நோயாளிகள் வரும் போது, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகளில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், விரைவில் 25 ஆக்சிஜன் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியள்ளது.

Views: - 172

0

0