முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்துகளில் இருந்து இறக்கி விட்டு அபராதம் வசூலிப்பு… போலீசார் அதிரடி நடவடிக்கை

Author: Babu Lakshmanan
6 January 2022, 1:41 pm
Quick Share

கரூர் : கரூரில் முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்களை போலீசார் பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் காவல்துறையினர் வாகன தணிக்கையில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் நடந்து செல்பவர்கள், இரண்டு மற்றும் 4 சக்கர வாகனத்தில் செல்பவர்களை மறித்து அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், நகர பேருந்துகள், தொலை தூர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை பேருந்துகளில் இருந்து கீழே இறக்கி விட்டு அவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

கரூர் நகரில் மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் பல்வேறு இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 308

0

0